உள்ளடக்கத்திற்குச் செல்
ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் — உங்களுக்கான சாவி
தன்னார்வலராகுங்கள்
மூடுபனி படர்ந்த மலைகளுக்கு மேலே சூரிய உதயம், மாலை அணிவிக்கப்பட்ட குருஷக்தியின் பளிங்கு மூர்த்தியுடன்

நான் உங்களை கவருவதற்காக வரவில்லை.. கரையேற்றவே வந்திருக்கிறேன்..

— குருஷக்தி

ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் — உலகெங்கிலும் உள்ள ஆன்மாக்களுக்கு வழிகாட்டும் தெய்வீக மனித சேவை இயக்கம்.

ஜாதி, இனம், நிறம், மதம் ஆகிய பேதங்களைக் கடந்து நின்று, ஒவ்வொரு மனித வாழ்விற்கும் ‘சாவியாக’ விளங்கும் புனிதத் தலம்.

இன்றைய செய்தி

குரு : ஒரு காந்தம். இரும்புகளை (பக்தர்களை) மட்டுமே அது ஈர்க்கும். குப்பைகளை தவிர்க்கும்..!

— குருஷக்தி

குருஷக்தியின் மேலும் சில வாக்கியங்கள்

குரு : தான் ஜெயிப்பதற்காக பிறந்தவர் அல்ல. நம்மை போன்றவர்களை ஜெயிக்க வைப்பதற்காக பிறந்தவர்..!

— குருஷக்தி

குருசேவை என்பது நேரம் கிடைக்கும்போது செய்வதோ, கட்டாயத்தினால் செய்வதோ, அஹங்காரத்தினால் செய்வதோ,பிறரின் பெருமை, புகழ், சம்பாதிக்க செய்வதோ, இரக்கப்பட்டு போனால் போகிறது என்று செய்யப்படுவதோ, அலட்சியமாக செய்வதோ, பிரதிபலன் எதிர்பார்த்து செய்வதோ, தனக்குதோன்றுவதை செய்வதோ, தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கியதைச் செய்வதோ, தான் முகர்ந்து, சுவைத்து பார்த்ததை செய்வதோ, அசிரத்தையாக செய்வதோ கூடாது.. அப்படி செய்யப்படுவது குருசேவையும் கிடையாது..

— குருஷக்தி

கோடியில் ஒரு சிலருக்கு மட்டுமே குருவை அடைகிற அதிர்ஷ்டம் கிடைக்கும். அவர்களிலும் ஓரிருவரால் மட்டுமே குரு வழி நடக்க இயலும்..அவர்களே முழுமையான வாழ்வு வாழ்கிறார்கள்.. அவர்களே முன்னுதாரணமாக வாழத்தெரிந்தவர்கள்.. வாழுகிறவர்கள்..

— குருஷக்தி

கண்ணில் பார்வை இருந்தாலும் பார்ப்பதற்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. நம்மிடம் திறமை இருந்தாலும் அது வெளிப்பட ஒரு குரு ஆசிர்வாதம் தேவைப்படுகிறது..

— குருஷக்தி

கடவுளை வணங்குவதற்க்கு ஒரு பக்தனுக்கு கட்டிடம் தேவையில்லை..!

— குருஷக்தி

ஒரு சூரியன் முழு பூமியையே வெளிச்சமாக்கி விடுகிறது. ஒரு குரு ஆசிர்வாதம் நமது இருளான வாழ்க்கையை வெளிச்சமாக்கி விடும்.. ஒளி ஏற்றி விடும்.

— குருஷக்தி

நான் தினமும் உன்னை நோக்கி ஒவ்வொரு அடியாக வந்து கொண்டேயிருக்கிறேன்.. உனது பக்தி வளர்வதைப்போல..

— குருஷக்தி

ஸத்யத்தை சரணடைந்தவனுக்கு ஸங்கடங்கள் ஏது? துன்ப-துயரங்கள் ஏது? கர்ம கட்டுக்கள் ஏது? எம பயம்தான் ஏது?

— குருஷக்தி

பக்தி: கடவுளோடு சங்கமிப்பது. கடவுளோடு கலப்பது. கடவுளுக்கு பயப்படுவது அல்ல.

— குருஷக்தி

ஆசி உங்களை ஒருபோதும் அழிய விடாது. சாபம் உங்களை ஒருபோதும் உண்மையாக வாழ விடாது.

— குருஷக்தி

வரவிருக்கும் தரிசன நாட்கள்

  • பொன்னிற மாலைப் பொழுதில் திருவண்ணாமலை ஆஷ்ரமத்தை நோக்கிக் காணிக்கைகளை ஏந்திச் செல்லும் பக்தர்களின் ஊர்வலம்

    திருவண்ணாமலை ஆஷ்ரம்

    ஒவ்வொரு அமாவாசையிலும் (புது நிலவு), ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே.


    அடுத்த அமாவாசை தரிசனம்

    Saturday

  • சூரிய உதயத்தில், பழைய ஆலமரத்தால் சூழப்பட்ட ஏலகிரிமலை ஆஷ்ரமத்தின் வெண்மையும் பொன்னிறமும் கொண்ட கோயில்

    ஏலகிரிமலை ஆஷ்ரம்

    ஒவ்வொரு பௌர்ணமியிலும் (முழு நிலவு), ஆண்டுக்கு 12 நாட்கள் மட்டுமே.


    அடுத்த பௌர்ணமி தரிசனம்

    Sunday