உள்ளடக்கத்திற்குச் செல்
ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் — உங்களுக்கான சாவி
தன்னார்வலராகுங்கள்
மூடுபனி படர்ந்த மலைகளுக்கு மேலே சூரிய அஸ்தமனம், வெண்மையும் பொன்னிறமும் கொண்ட ஆஷ்ரமக் கோயிலும் மாலை அணிவிக்கப்பட்ட குருஷக்தியின் பளிங்கு மூர்த்தியும்

உங்களுக்கான சாவி

ஸத்யப் பாதை

• ஸத்ய வழி •

பொன்னிற மாலைப் பொழுதில் பாறையில் அமர்ந்து பள்ளத்தாக்கை நோக்கியபடி இருக்கும் ஒரு சிறுவன்

ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் பிறந்தது எப்படி?

ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் நமது குருஷக்தி ஸ்ரீ ஸத்ய பகவானால் நிறுவப்பட்ட ஸ்வாரஸ்ய பின்னணி:

நமது குருஷக்தி ஸ்ரீ ஸத்ய பகவான் அவர்கள், தமது 12 வயதில், ஜாதி, இனம், நிறம், மதம் போன்ற பாகுபாடுகளையும், பிளவுபாடுகளையும் எதிர்த்து சொந்த வீட்டை விட்டு வெளியேறிய போதே துவங்கிய புரட்சி தான் ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரமத்தை பிரசவித்தது என்றால் அது மிகையாகாது.

சிறு வயது முதலே நமது குருஷக்தியானவருக்கு, நலிந்தவர்கள் மீதும், சமூகத்தாலும் வாழ்க்கையாலும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதும், உறவுகள் எனும் ஆதரவுகள் இன்றி நிராகரிக்கப்பட்டவர்கள் மீதும் அலாதி அன்பும், கருணையும் நிறைந்தே இருந்தது.

நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தான் ஒரு தாயின் தேவை இருக்கிறது..இவர்களுக்காக நான் இருக்கிறேன்.. இனி நானே இவர்களின் தாய்
— குருஷக்தி

இப்படி பல பிரிவினைகளையும், சமூக பிளவுகளையும், பாகுபாடுகளையும் இவைகளால் பாதிப்புகள் அடையும் காலம் காலமாக கண்டு கொள்ளப்படாத மக்களையும், அறியாமையினால் தமக்கு என்ன தேவையென்றே, வாழ்க்கையில் எதை அடைய வேண்டும், மனித வாழ்க்கை என்பது எதற்காக மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையே உணர வைக்கப்படாமல், மூட நம்பிக்கையினால் ஏமாற்றப்படும் அப்பாவி மக்களை கண்டு மனித சுரண்டல்களுக்கும், ஏமாற்றுதல்களுக்கும், மோசடிகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று தான் நமது குருஷக்தியானவர்கள் ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரமத்தை நிறுவினார்கள்.

முழுக்க முழுக்க மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், மனிதனை மதிக்கும், அவர்களது மனதை மதிக்கும் ஒரு இயக்கத்தை துவங்கினார்கள் நமது குருஷக்தியானவர்.

கடவுளை வணங்க காசு எதற்கு.. பக்தியும் சிறு வழிநடத்துதலுமே போதுமானது..
— குருஷக்தி
பச்சை மற்றும் மஞ்சள் திரைகளால் அலங்கரிக்கப்பட்ட, மரங்களும் கல்படிகளும் சூழ்ந்த வெண்மையும் பொன்னிறமும் கொண்ட சன்னிதி

இப்படித்தான் பக்திக்கும் பக்தனுக்கும் முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கும் ‘ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் – உங்களுக்கான சாவி’ தெய்வீக மனித சேவை இயக்கம் உருவானது. அதன் நோக்கத்தையே இயக்கத்தின் பெயராகவும் கொண்டுள்ளது.

இயக்கத்தின் கொள்கைகள்

நான் ஒரு சாவி (தீர்வு) தயாரிப்பாளன். என்னிடம் உங்களுக்கான சாவியும் (வாழ்க்கை தீர்வும்) நிச்சயம் இருக்கும்..
— குருஷக்தி

ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் நிலைநாட்டும் அடிப்படைக் கொள்கைகள்:

  • இவ்வுலகில் பிறவி எடுக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அவரை உணர செய்வதும்..

  • ஒருவர் அவரது வாழ்க்கை முழுவதும் எதை தேடி அலைந்துக்கொண்டு இருக்கிறாரோ அதை அடைய செய்வதும்..

  • ஒருவருக்கு தனது வாழ்க்கையில் எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவெடுக்க சரியான வழிநடத்துதல் அளிப்பதும்..

  • இந்த மனித வாழ்க்கை எனும் மகா சமுத்திரத்தில் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும், வழிநடத்தும், திசைக்காட்டும் கலங்கரை விளக்காக செயல்படுவதும்..

  • அருகி குறுகி வரும் நமது பாரம்பரியம், கலாச்சாரத்தை அழியவிடாமல் மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதும், பாராமரிப்பதும்..

  • போலி ஆன்மீகம் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக, மனிதர்களை சுரண்டும் மூட நம்பிக்கைகளை பட்டியலிட்டு (பகுத்தறிவு பேசும் நாத்திக இயக்கங்கள் கூட மூட நம்பிக்கைகளை பட்டியலிட்டது கிடையாது.) அவைகள் எதனால் மூட நம்பிக்கைகள் ஆகிறது என்பதற்கான அறிவியல் பூர்வமான விளக்கத்தை வழங்கி, தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டு உண்மையான மனித சேவை ஆற்றுவதும்..

  • உண்மையான பக்தி என்பது பாலுடன் ஒரு துளி தயிர் சேர்வதைப்போல, இறைவனுடன் நாம் சங்கமம் ஆவதே என்பதை உணர வைப்பதும்..

  • கண்ணில் பார்வை இருந்தாலும் பார்ப்பதற்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. அதேப்போலத்தான் நம்மிடம் திறமை இருந்தாலும், அது வெளிப்படவும், நமது வாழ்க்கை முழுமையடையவும், சிறக்கவும் ஒரு குரு ஆசீர்வாதம் தேவைப்படுகிறது.. அந்த குரு ஆசீர்வாதத்தின் பெருமைகளை உலகத்திற்கு கொண்டு சேர்ப்பதும்..

  • நமது ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரமத்திற்கு வருகை தரும் யாரும் ‘வயிற்றில் பசியோடும், மனதில் குறையோடும் வெளியே செல்ல கூடாது’ என்பதும்..

  • பக்தர்களுக்கு எல்லையில்லாத இறைவன் ஸ்ரீ ஸ்ரீ மஹாசக்தியானவரை அடைய ஒரு பாலமாக செயல்படுவதும்..

  • நமது இயக்கத்தின் பெயரைப்போலவே இங்கு வருகை தரும் ஒவ்வொருவரின் வாழ்விலும் சாவியாக செயல்படுவது.. போன்ற பல கொள்கைகளை கொண்டதுதான் நமது ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம்.

“நான் உன்னுடன் உள்ளவரை உன்னை ஒருவராலும் வெல்ல முடியாது..”

— குருஷக்தி
  • தெய்வீக மனித சேவை

    இயக்கம்

  • இறைவனுக்குப் பக்தி

    மனிதனுக்குச் சேவை

  • அனைத்துப் பேதங்களையும் கடந்து

    அன்பில் ஒன்றுங்கள்

  • ஒவ்வொரு வாழ்விற்கும் சாவி

    ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பாதை