உள்ளடக்கத்திற்குச் செல்
ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் — உங்களுக்கான சாவி
தன்னார்வலராகுங்கள்

ஸத்ய ஆஷ்ரம் குடும்பம் • நமது சமூகம்

பக்தியிலும் சேவையிலும்ஒன்றிணைந்த குடும்பம்

ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் ஒரு இடம் மட்டுமல்ல; அது தெய்வீக மனிதநேயச் சேவைக் குடும்பம். பக்தியிலும், சேவையிலும், ஸத்யத்தின் பாதையிலும் இதயங்கள் ஒன்றிணையும் ஓர் ஆன்மீகக் குடும்பம்.

The white ashram shrine with its gilded domes at sunrise, the sun breaking through trees on the left and a great banyan spreading over it from the right

நமது இயக்கத்திற்கு வருகை தருபவர்கள் மொத்தம் நான்கு வகை

நமது ஸத்ய ஆஷ்ரமத்திற்கு வருபவர்கள், வருகை தருபவர்கள் மொத்தம் நான்கு வகை.

  • 1 வருகையாளர்கள்

    ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் பற்றி, நமது ஆஷ்ரமத்தின் ஸ்ரீ குருஷக்தி மஹாசக்தி பற்றியும், அவர்களின் சிறப்புகள், மற்றும் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்ற அற்புதங்கள், பலரின் வாழ்க்கை மாற்றங்களைக் கண்டும் கேட்டும், உணர்ந்தும் அவரது தரிசனத்திற்காக ஆசீர்வாதத்திற்காக, தொடுகைக்காக, தீக்ஷைக்காக, குணமளித்தலுக்காக இப்படி பல எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், நோக்கங்களுக்காக ஆஷ்ரமத்தை நாடி தேடி வருபவர்கள் வருகையாளர்கள்.

  • 2 பக்தர்கள்

    வருகையாளர்கள் முதல் நிலை. அப்படி வந்து செல்கையில் பகவானால் வாழ்க்கை மாற்றமடைந்து அவர் மேல் பக்தியும், அன்பும் ஏற்பட்டு, அவரிடம் தம்மை ஒப்படைக்கத் தயாராக இருப்பவர் பக்தர். குருவாக ஏற்றுத் தன்னை மாற்றியமைக்க பகவானுக்கு அனுமதி அளித்து, மாற்றியமைத்துக்கொள்ள தயாரானவர் பக்தர். இவர் வருகையாளருக்கு அடுத்த இரண்டாம் நிலையானவர்.

  • 3 சேவையாளர்கள்

    நமது ஆஷ்ரம் கர்ம வினை போக்கும் ஸ்தலம் என்பதால் இங்கே சேவை செய்வது கர்மவினையைக் கரைக்கும் என்பதால் சேவை ஒரு அரிய வாய்ப்பு. பக்தர்கள் இதை அறிந்து உணர்ந்து சேவையாளராக மாறுகின்றனர். இவர்கள் மூன்றாம் நிலையினர்.

  • 4 சீடர்கள்

    வருகையாளர் நிலையிலிருந்து பக்தன், சேவையாளர் நிலைகளை அடைந்து, அடுத்த நிலையானது சீடர் நிலை. இந்த நிலை பக்தர்கள் தங்கள் வாழ்க்கை முதலான அனைத்தையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்து விட்டவர்கள் சீடர்கள். இவர்கள் தனது இயக்கத்தின் லட்சியத்திற்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்துச் சேவையில் கரைத்துக் கொள்வார்கள். இவர்கள் ஒரு மரத்தின் வேருக்கு ஒப்பானவர்கள்.

விருட்சமும் அதன் கிளைகளும்

ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் – உங்களுக்கான சாவி இயக்கம் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையிலும், ஏலகிரிமலையிலும் தற்போது இயங்கி வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் அமாவாசை பௌர்ணமிகளில் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

  • பொன்னிற மாலைப் பொழுதில் திருவண்ணாமலை ஆஷ்ரமத்தை நோக்கிக் காணிக்கைகளை ஏந்திச் செல்லும் பக்தர்களின் ஊர்வலம்
    திருவண்ணாமலை ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம்

    அமாவாசை தோறும்வருடத்தில் 12 நாட்கள்மட்டுமே திறந்து இருக்கும்.

  • சூரிய உதயத்தில், பழைய ஆலமரத்தால் சூழப்பட்ட ஏலகிரிமலை ஆஷ்ரமத்தின் வெண்மையும் பொன்னிறமும் கொண்ட கோயில்
    ஏலகிரிமலை ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம்

    பௌர்ணமி தோறும்வருடத்தில் 12 நாட்கள்மட்டுமே திறந்து இருக்கும்.

வரலாற்றுப் பாதை

  1. @சென்னை — 1995-ல் நிறுவப்பட்டது.

  2. @பெங்களூரு — 2000-ல் நிறுவப்பட்டது.

  3. @ஏலகிரிமலை — 2002-ல் நிறுவப்பட்டது.

  4. @பாண்டிச்சேரி — 2011-ல் நிறுவப்பட்டது.

  5. @ஓசூர் — 2013-ல் நிறுவப்பட்டது.

  6. @திருவண்ணாமலை — 2015-ல் நிறுவப்பட்டது.

ஸத்ய ஆஷ்ரம் பக்தர்களும் அவர்கள் ஸத்ய ஆஷ்ரமத்தில் காலடி வைப்பதால் உண்டாகும் பலன்கள்

ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரமத்தில் சாதாரண மனிதர் ஒருவர் காலடி வைக்கவே முடியாது. உலகில் உள்ள 830 கோடி மனிதர்களில் ஒருவர் ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரமத்தில் காலடி எடுத்து வைக்கிறார் என்றால் அவர் ஸ்ரீ மஹாசக்தி குருஷக்தி அழைப்பின் பேரில் மட்டுமே காலடி வைக்கிறார். அப்படி காலடி வைப்பவரையே நாம் விதிக்கப்பட்டவர் என்று அழைக்கிறோம். அவர்கள் மூன்று வகையினர்:

  • ஸ்ரீ மஹாசக்தி குருஷக்தி அழைப்பின் பேரில் மட்டுமே ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரமத்தில் காலடி வைக்கும் விதிக்கப்பட்டவர்.

  • தனது தந்தை வழியில் 7 தலைமுறைகள், தாய்வழியில் 7 தலைமுறையினர் — அவர்களில் யாரோ ஓரிருவர் அவர்கள் வாழும் காலத்தில் செய்து வந்த குருசேவை அல்லது தெய்வ சேவையின் பலனாக விதிக்கப்பட்டவராக ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரமத்தில் காலடி வைக்கிறார்.

  • தனது தூய பக்தியினால் விதிக்கப்பட்ட பக்த ஆத்மாவாக ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரமத்தில் காலடி வைக்கும் பாக்கியசாலி பக்தர்.

மேற்கண்ட மூன்று வகையினரையும்‘நாம் விதிக்கப்பட்ட ஸ்ரீ ஸத்ய பக்த ஆத்மாக்கள்’ என்று பொதுவாக அழைக்கிறோம்.

இம்மூன்று வகையினரைத் தவிர வேறு யாரும் இங்கு காலடி வைக்க இயலாது — இது சாதாரண மனிதர்கள் முன் நிற்கும் மிகப்பெரிய தெய்வீக சவால்.

ஏலகிரிமலை ஸ்ரீ ஸத்ய ஆஷ்ரம் — பக்தர்களும் அவர்கள் அடையும் பலன்களும்

The white-and-gold Elagiri Hills shrine at the head of its gilded steps, framed by tall palms.
Devotees dressed in white seated together on the ground during a ceremony at the ashram.
Devotees holding lit lamps in the ashram prayer hall.
The shrine at night, with rows of oil lamps burning on the ground before it.

உள்ளபடியே வாருங்கள்... மாற்றம் பெற்றுத் திரும்புங்கள்.எங்களுடன் ஸத்யப் பாதையில் பயணியுங்கள்.ஓம் மஹாசக்தி.. ஜெய் குருஷக்தி..!

வருகைகள்பலன்
11 தடவைஇப்பிறவியின் நோக்கத்தின் வாயிலும் முக்தியின் வாயிலும் திறக்கின்றன.
77 தடவைகள்சகலவிதமான தரித்திரங்களை நீக்கும், போக்கும்; பொன்னும், பொருளும் சேரும்.
99 தடவைகள்ஐஷ்வர்யங்களுக்கான வாசலைத் திறக்கும்; தேவைகள் நிறைவேறத் துவங்கும்.
1515 தடவைகள்சுகங்கள், இன்பங்கள் கிடைக்கத் துவங்கும்.
1818 தடவைகள்கட்டுக்கள், தளைகள் விலகும்; கர்ம துன்பங்கள் விலகத் துவங்கும்.
2727 தடவைகள்இவ்வுலகப் பெருமைகளை அடையச் செய்யும், புரியாததும் புரியும், வாழ்க்கை வேறு தளத்திற்கு மாற்றப்படும்.
4242 தடவைகள்கவலைகள் மறையும், பக்தி மலரும், பக்தி பெருகும்.
வாழ்க்கை முழுவதும் காலடி வைத்து வருகிற வைராக்கிய பக்தர்கள்முழு பாதுகாப்பும் முழு வாழ்க்கை பலன்களும் கிடைக்கிறது; கண்டங்கள், விதிப்பலன்கள், துரதிர்ஷடங்கள், துர்லபங்கள், சாபங்கள், சகல வித தோஷங்கள், பாவங்கள் பொசுங்கும்.
முழு வாழ்வையும் ஸமர்ப்பணம் செய்த ஸத்யவழியாக வாழ்கிறவர்களுக்குமோக்ஷம் — இறைவன் மஹாசக்தியானவருடன் வாழும் வாழ்வை பேறாகப் பெறுகிறார்; மோக்ஷத்தை சொந்தமாக்குகிறார்; மோக்ஷ பேரின்பத்திற்கு அதிபதியாகிறார்; பிறப்பு – இறப்புகள் அற்ற பேரானந்த நிலைக்கு உரிமையாளராகிறார்.