
போதனைகள் • பாதை
போதனைகள்
ஸத்யவழி பிரார்த்தனை • ஸத்ய வாக்குகள்குருவின் செய்திகள் • அன்றாடப் பயிற்சி
வழிகாட்டும் வார்த்தைகள். மாற்றியமைக்கும் பயிற்சிகள்.பரம ஸத்யத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பாதை.
ஸத்யவழி பிரார்த்தனை
சரணாகதி, பக்தி மற்றும்மஹாசக்தியுடன் ஒன்றிணைதலின்ஒரு பிரார்த்தனை.
ஸத்ய வாக்குகள்
ஸத்யமான, வளர்ச்சியடைந்ததெய்வீக வாழ்விற்கானகாலம் கடந்த ஞானம்.
குருவின் செய்திகள்
குருஷக்தி ஸ்ரீ ஸத்யபகவானின் வழிகாட்டுதலும்தொலைநோக்குப் பார்வையும்.
அன்றாடப் பயிற்சி
அன்றாட வாழ்வை ஒருங்கிணைத்து,உயர்த்தி மாற்றியமைக்கும்எளிய ஆன்மிகப் பயிற்சிகள்.

ஸத்யவழி பிரார்த்தனை
ஓம் மஹாசக்தியே! நீ பரிபூரணம்..! நான் பூரணம்..! நீ மஹாசக்தி..! நான் சக்தி..! நீ தெய்வம்..! நான் உன்னில் ஒரு பகுதி உன்னிலிருந்தே நான் வந்தேன் இறுதியில் உன்னையே நான் அடைவேன்
இங்கே உன்னை சாட்சியாக வைத்தே காரியங்களை செய்கிறேன்..!கடமைகளை நிறைவேற்று கிறேன்..!
அதற்கு பலனாக புகழ்ச்சி இகழ்ச்சி பரிசு தண்டனை எது வந்தாலும் தாங்கும் பக்குவம் கொடு..!
நான் பாசத்தினாலும் உணர்ச்சிகளாலும் கட்டப்பட்டு இருக்கிறேன்..! நான் பாசத்தினாலும் உணர்ச்சிகளாலும் தவறு செய்யாமல் இருக்க என் அறிவில் ஞானத்தை உண்டாக்கு..!
எனக்கு எது தேவை எது தேவையில்லை என்பது உனக்குத்தான் தெரியும் தேவையானவைகளை கொடு தேவை இல்லாதவைகளை விலக்கி விடு..!
நான் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும்..!இன்ப துன்பங்களை சமமாக பாவிக்க வேண்டும்..!
என்னையும் பிறரையும் பாகுபாடின்றி நேசிக்க வேண்டும்..!
அதற்கு அன்பை நிரம்பச் செய் மகிழ்ச்சியை பெருகச் செய்..! இந்த அபூர்வ பிறவியை அன்பளிப்பாக கொடுத்த உன்னை நன்றிகளுடன் வணங்குகிறேன்..!
மஹாசக்தியே எங்கள் அனைவரையும் ஆசீர்வாதம் செய்..!
ஓம் ஷாந்தி..! ஷாந்தி..! ஷாந்திஹி..!
ஸத்ய வாக்குகள்
நான் உன்னுடன் உள்ளவரைஉன்னை ஒருவராலும்வெல்ல முடியாது..!
— குருஷக்தி குருவின் செய்திகள்
வெறும் திருப்திக்காக என்னிடம்வராதீர்கள். தாகத்துடன் பரமஸத்யத்தைத் தேடுங்கள்.
— குருஷக்தி அன்றாடப் பயிற்சி
- பிரார்த்தனை
- தியானம்
- சேவை
- ஸத்யவழி வாழ்க்கை நெறி
நமது போதனைகள் உங்களுக்கு வழிகாட்டுகின்றன
வெறும் நம்பிக்கை அல்ல...உணர்தல்.வெறும் வார்த்தைகள் அல்ல...மாற்றம்.
ஸத்யத்தில் வாழுங்கள். அன்புடன் சேவை செய்யுங்கள். இறைவனை உணருங்கள்.


