1தினசரி ஒரு பரிசு
காலை விழித்தவுடன், ஸ்ரீ மஹாசக்தி இன்றைய நாளை எனது கையில் பரிசாக கொடுத்து இருக்கும் ஒரு வாய்ப்பு என நினைத்து, அன்றைய வாழ்வை துவங்கு. வாழப்பழகு. இன்னும் நீ வாழ ஆரம்பிக்கவே இல்லை.
வாழ்வதற்கே அருள் வேண்டும். அதனை நினைத்து, இன்றைய தினம் “ஸத்யம் சமர்ப்பணம்! மஹாசக்திக்கு அர்ப்பணம்!!” என்று சொல்லி ஒவ்வொரு தினத்தையும் அர்ப்பணிப்புடன் துவங்கு.





