சுருக்கமாகச் சொன்னால், ஒருவரும் அறியாமலே சமூகத்தில் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அவரது அதிர்வலைகள் ஊடுருவி பாய்ந்து கொண்டிருக்கிறது.. புதிய சிந்தனைகளாக.. எண்ணங்களாக.. கதைகளாக.. கவிதைகளாக.. ப்ரார்த்தனைகளாக, பேச்சுக்களாக.. செய்திகளாக..! உங்களது அன்றாட வாழ்க்கையில் சூரியனைப் போல நமது குருஷக்தியானவரின் பங்களிப்பை அறிந்தோ அறியாமலோ உங்களால் தவிர்க்க முடியாது..!

குருஷக்திகுருதேவர்
குருஷக்திஸ்ரீ ஸத்ய பகவான் :நல்லதோர் வீணை
குரு பிரம்மா.. குரு விஷ்ணு.. குரு தேவோ மகேஷ்வரஹ.. குரு சாட்ஷாத் பரபிரம்மா தஸ்மைஸ்ரீ குருவே நமஹ..’
குருஷக்தி பகவான் ஸ்ரீ ஸத்யம் கோவில் கட்ட வந்தவரோ, குறி சொல்ல வந்தவரோ அல்ல, பகவான் ஸ்ரீ ஸத்யம் சாமியாரோ, ஸன்யாசியோ அல்ல. உலக சுதந்திரத்தை புணரமைக்கவும், சீர்படுத்தவும் வந்த ஓர் அவதாரமாவார்கள். மனித விடுதலைக்கான சாவியாவார்கள்.
“நாம் ஒரே குடும்பம்.. நாம் ஒரே உலகம்” என்று உலகை நவீன நாகரீகத்தை நோக்கி அழைத்துச்செல்ல வந்த ஒரு பூரண சுதந்திரர்.
நமது குருஷக்தி, கேரள காஞ்சன் காட்டில் அவதரித்து ஸ்ரீ மஹாதேவ் எனும் ஓர் மஹானால் வளர்க்கப்பட்டவர்கள். சிறுவயதிலேயே பலருடைய கர்மாக்களை இவர்கள் வாங்கிக் கொள்வதையும், பலருக்கு அவர் செய்த அற்புதங்களையும் நேரில் கண்ட பலரும் இவர் ப்ரபஞ்ச மஹாசக்தியின் அவதாரம் என்பதை வெகுதாமதமாகத்தான் உணர்ந்தார்கள்.
தனது சொந்த வாழ்க்கையை சோதனைக் களமாக்கி, தான் வந்த நோக்கத்தை- தனது ஞானத்தை மக்களுக்கு கொடுப்பதற்காக மக்களின் வாழ்க்கை முறையை அறிய, கிட்டத்தட்ட 25 வருடங்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழ்ந்தார்கள். சாதாரண மக்களோடு உறவாடவும், கலக்கவும் பல யுக்திகளை குருஷக்தி கையாண்டார்கள். மக்களோடு தொடர்புடைய பலவிதமான தொழில்கள் செய்து கொண்டு பலவிதமான ஆன்மீக கேள்விகளை அவர்களிடையே எழுப்பினார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். பதில்களை கூறுவோர்களுக்கு பற்பல பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்கள். ( தற்போதும் குருஷக்தியிடம் அந்த பழக்கம் உள்ளதை பலரும் அறிவார்கள்.)
தனது 12 வது வயதில் கேரளாவில் ஆன்மீக பயணத்தை தொடங்கிய நமது குருஷக்தி இமயமலை வரை இந்தியா முழுவதும் கால்நடையாகவே நடந்தார்கள். அந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதிலும் ஆஷ்ரமங்கள், மடங்கள், கோவில்களில் உள்ள ஞானியரோடு, மஹான்களோடு தங்கினார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே கேள்விகளால் உறவாடினார்கள்.
சென்னை, பெங்களூர்களில் ஆஷ்ரம் அமைத்து மனித சேவைகளில் ஈடுபட்டார்கள். ஏலகிரிமலையில் ஆஷ்ரம் நிறுவினார்கள். பலருடைய வாழ்க்கையை அற்புதகரமாக மாற்றி அமைத்தார்கள். த்யான முகாம்களை நடத்தினார்கள். எந்த விதமான விளம்பரங்களும் ஆர்ப்பாட்டங்களும் இல்லாமலேயே.. விளம்பரங்கள், புகழ் ஆகியவைகளிலிருந்து அவர் ஒதுங்கிக் கொள்ளும் பாங்கே அற்புதமான கவிதை
ஆன்மீகத்தில் சாமியார்கள், பக்தர்கள், ஞானிகள், மஹான்கள், குருமார்கள், அவதார புருஷர்கள் ஆகியோர்களையும், போலி மனிதர்களையும் அடையாளம் காட்டி, மனித உலகின் சகலவிதமான துன்ப-துயர குழப்பங்களுக்கும், தர்மத்தை தெளிவுபடுத்தி, தர்மத்தை ஸ்தாபிக்க அவதரித்திருக்கிறவர்கள் தான் நமது குருஷக்தி..
அவர்கள் தனது செய்திகளை மஹாமந்திர அதிர்வலைகளாக உலகம் முழுமைக்கும் அமைதியாக பரவச் செய்து வருகிறார்கள். இது மிகவும் அபூர்வமான மிகப் பழமையான தெய்வீக முறையாகும். அவர்கள் வாய் வழியாக கூறிய பல செய்திகளை உலகத்தின் பல மூலைகளில் பலர் உணர்ந்தும், பிறர் சொல்லக்கேட்டும், படித்தும், அனுபவித்தும் திடுக்கிட்டிருக்கிறார்கள்..!
நான் செய்து வருவது ஆன்மீகப் புரட்சியில் மனிதப் பரிணாம வளர்ச்சியாகும்! நான் என்ன செய்கிறேன் என்பதையும் என்ன சொல்கிறேன் என்பதையும் உங்களில் பலர் இப்பொழுது அறிய மாட்டீர்கள். அதை அறிவதற்கான காலம் வரும் பொழுது ஈடு இணையற்ற பரவசமும் ஆனந்த நிலையையும் அடைவீர்கள்..!
என்னிடம் எவரும் திருப்தி அடைவதற்காக மட்டும் தயவு செய்து வராதீர்கள். உண்மையான ஸத்யத்தை அடைவதற்காக தாகத்துடன் வருகிறவர்களை மட்டும் நான் என்றென்றும் வரவேற்கிறேன். ஏனெனில்,திருப்தி என்பது வெளி உலக பகட்டில் வேஷத்தில் அடையக் கூடியது. ஸத்யம் என்பது உள் உலக வெளிச்சத்தில் அடையக் கூடியது. திருப்தி என்பது நீங்களே உருவாக்கிக் கொண்ட எதிர்பார்ப்பின் வடிவம். ஸத்யம் என்பது எவராலும் உருவாக்க முடியாத காலத்தை கடந்த உங்கள் உள் நிலை படிவம். ஸத்யத்தைத் தேடுகிறவர்கள் இறுதியில் கண்டடைகிறார்கள்.. அவர்கள் பாக்யசாலிகள்.. திருப்திப்படுதலுக்காக அலைகிறவர்கள் பொய்களையும், பகட்டுகளையும் கண்டு ஏமாந்து துக்கத்தால் விரக்தி அடைகிறார்கள்.. அவர்கள் துர்பாக்கியசாலிகள். உண்மையைத்தேடுகிறவர்களை நான் வரவேற்கிறேன்...
— குருஷக்தி
ஸத்ய தர்ம சங்கல்ப விரதம்
இங்கேதான், இப்படித்தான் குருஷக்தியின் பிரதிபலன் எதிர்ப்பாராத சுய சங்கல்பம் பிறந்தது..
20 வருடங்களுக்கும் மேலாக யாரும் நேரில் கண்டிராத ஓர் அரிய அற்புதம் : குருஷக்தி ஸ்ரீ ஸத்ய பகவான்
துவக்கம் முதலே குருஷக்தியானவருக்கு விளம்பரம், புகழ், பெயர், பெருமைகள் மீது விருப்பம் துளியும் இருந்ததில்லை.

சூரியனுக்கு ஏது விளம்பரம்? பூமிக்கும் சமுத்திரத்திற்கும் விளம்பரம் உண்டா? அவைகள் எங்காவது ஆர்ப்பாட்டம் செய்கின்றனவா? அவைகளின் சேவையில் எப்படி தினமும் தங்களை கரைத்துக்கொள்கின்றன.. அதுப்போலவே நாம் இங்கு செய்யும் சேவை தான் முக்கியமே தவிர, பலனை எதிர்பார்க்க கூடாது, அப்படி எதிர்பார்த்து செய்தால் அது தூய தெய்வீக மனித சேவையும் ஆகாது
தினமும் நமது குருஷக்தி அவர்களுக்கு அவர்களே எடுத்துக்கொள்கிற சேவை பிரமாணம்
நான் எனது சேவையைபூமியைப் போல.. நீரைப் போல.. காற்றைப் போல..சூரியனைப் போல.. ஞானியர்களைப் போல.. குருமார்களைப் போல..ஆன்மீகத்தைப்போல.. பல சான்றோர்களைப் போல.. எல்லையில்லாத இறைவன் மஹாசக்தியானவரைப் போல..பிரதிபலன் எதிர்ப்பாராமல் சேவையில் நம்மை சந்தனத்தைப் போல.. கரைத்துக் கொள்வேனாக.. கரைந்துபோவேனாக..ஓம் ஷாந்தி.. ஓம் ஷாந்தி.. ஓம் ஷாந்தி.
ஒருவரும் நமது குருஷக்தியானவரை நேரில் கண்டதில்லை
20 வருடங்களுக்கு மேலாக நமது குருஷக்தியானவரை யாரும் நேரில் கண்டதேயில்லை. பார்த்ததே இல்லை. அப்போது எவ்வாறு தரிசனம் தருகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு : திரை வழியாக. திரைக்கு பின்னே இருந்து.. அதைத்தான் ஸத்ய பக்தர்களும் சீடர்களும் ‘ஸத்ய தர்ம சங்கல்ப விரத திரை’ என்று கூறுகிறார்கள்.
‘ஏன் இப்படி, இந்த முறையில் தரிசனம் தருகிறீர்கள்? ஏன் தாங்கள் மக்கள் முன்பு தோன்றுவதில்லை?’ என்று கேட்டவர்களுக்கு நமது குருஷக்தியின் ஞான பதில் :

நான் சினிமா நடிகரோ, பிரபலமோ, மேடை பேச்சாளரோ கிடையாது. மக்கள் மத்தியில் தோன்றுவதற்கு..எனது தெய்வீக மனித சேவையை வெகு சிறப்பாக திரைக்கு பின்னால் இருந்தே என்னால் செய்ய முடியும். நான் செய்யும் சேவை தான் பிரதானமே தவிர என் முகம் அல்ல. மட்டுமல்ல உலக புகழ், பெருமைகள், விளம்பரங்களில் இருந்து விலகி இருக்க இதுவே சிறந்த வழி..நான் யார் என்பதை விட நான் என்ன செய்கிறேன் என்பதே பிரதானம்..
நமது குருஷக்தி ஸ்ரீ ஸத்ய பகவான் : நமது தோழர்.. நமது வழிக்காட்டி.. நமது பார்வை.. நமது வெளிச்சம்.. நமது விமோச்சனம்.. நாம் தவற விடக்கூடாத கலங்கரை விளக்கு..
- தோழர்
- வழிக்காட்டி
- பார்வை
- வெளிச்சம்
- விமோச்சனம்
- கலங்கரை விளக்கு
அரிய போதனை: நம்பிக்கை அல்ல, உணர்தல்

கடவுளை நம்ப கூடாது.உணர வேண்டும்..”
இறை நம்பிக்கை என்பது மனம் சார்ந்த ஒன்று. ஒருவரின் எண்ணம் சார்ந்த ஒரு விஷயம். நம்பிக்கை என்றாலே ஒரு நிலை அல்ல. ஒரு நிலையற்ற நிலையே நம்பிக்கை எனப்படுவது. ‘இருந்தாலும் இருக்கலாம்’ அல்லது ‘இருந்துதான் ஆக வேண்டும்’ அல்லது ‘இருக்கும்’ இந்த மூன்றில் ஒன்றோ அல்லது மூன்றுமே தான் ஒருவரிடம் இருக்கும் நம்பிக்கையின் நிலை. நிலையற்ற நிலைகள்.
இறை உணர்வு என்பது மனம் சார்ந்த ஒன்றல்ல. அது ஒரு கருத்தும் அல்ல. மாறாக இறை உணர்வு என்பது ஒரு உயிரால் உணரப்படும் சுயமாக உணரப்படும் ஓர் உணர்வு. எனவே கடவுளை உணர்வதுதான் சரியானது. நம்புவது அல்ல..


